Friday, December 17, 2010

விக்கிலீக்சுக்கு எதிராக பல பாகங்களிலும் பதிவாளர்களின் போராட்டம்

பெரும் பரபரப்பை ஏற்படுத்தி பதிவுலக பதிவர்களை கதி கலங்க வைத்துள்ளது விக்கிலீக்ஸ்.விக்கிலீக்ஸ்  விக்கிலீக்ஸ் எங்கு பார்த்தாலும் இந்த விக்கிலீக்சை பற்றித்தான் பேச்சு ,பத்திரிகை செய்திகளில் அதிகமான பக்கங்களில் இடம்பெற்று இருப்பது விக்கிலீக்ஸ் பற்றிய செய்திகளே .பதிவுலகும் இதற்கு விதி விலக்கல்ல பதிவாளர்கள் பலரும் இதுபற்றியே பதிவெழுதி  வருகின்றனர்,அமெரிக்காவுக்கு அடுத்தபடியாக விக்கிலீக்சினால் அதிகமாக மன உளைச்சலுக்கு ஆளானோர்   பட்டியலில் இருப்பது நம் பதிவுலக பதிவாளர்களே.   


 காரணம் தாம் இடும் பதிவுகள் மக்கள் மத்தியில் சென்றடையாமையே இதற்கு காரணம் என FBI திடிக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது (எப்பூடி),இதனால் "ஜூலியன் அசஞ்சே" மிது பல பதிவாளர்கள் கடுப்பில் இருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது (ன்குலடட் மீ அல்சோ கடுப்பில் உள்ளேன் )
இதனால் இவரது உயிருக்கு ஆபத்து நேரிடக்கூடும் எனக்கருதி இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளில் இருந்து கூட்டுபடையாக விசேட பாதுகாப்பு படையணி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது , இதனால் சென்னை ,கொழும்பு ,கண்டி ,,யாழ்பாணம் ,மதுரை மற்றும் திருநெல்வேழி ஆகிய பிரதேசங்களில் பல பதிவாளர்கள் போராட்டங்களில்  இடுபட்டு  வருகின்றனர் .இப்போராட்டத்தில் பல கருத்துக்களை வழியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுப்பதாக பதிவர் சங்க ஊடக பேச்சாளர்  திரு.பப்ளிசிட்டி பரமசிவம் அவர்கள் குறிப்பிட்டார் .அவரின் கருத்து பின்வருமாறு 

இந்த போராட்டத்திற்கு பிரதான காரணம் பதிக்கப்பட்ட பதிவாளர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதே நாங்கள் பதிவாளர்கள் சார்பாக சில நிபந்தனைகளை  முன்வைக்கின்றோம் .

*  ஜூலியன் அசஞ்சேக்கு பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டுள்ள கூட்டு படையினை சம்பந்த பட்ட நாடுகள் திருப்பி அழைக்க வேண்டும்

* ஜூலியன் அசஞ்சே பதிவாளர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும் 

அவ்வொப்பந்தத்தில் குறிப்பிடப்படுவது யாதெனில் = 
*தினந்தோறும் ஜூலியன் அசஞ்சே செய்திகள் வெளியிடக்கூடாது 
மாதத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒருமுறை இவர் அரசியல் அம்பலங்களை வெளியிடலாம் ,

*அதுபோக பத்திரிகைகளில் இவர் சம்பந்தமான செய்திகள் வெளிநாட்டு செய்திகள் பக்கத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் ,

இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை எம் போராட்டம் தொடரும் என வீர முழக்கம் இட்டார் பப்ளிசிட்டி பரமசிவம் அவர்கள் .இதில் பாதிக்க பட்ட பதிவாளர்கல்  அனைவருக்கும் அழைப்பும் விட்டுள்ளார் இவர் 





(பி.கு =இதில் நானும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன் 
)
நான் வலைபதிவுலகிற்கு   புதுசு 
விக்கிலீக்ஸ் நால எனக்கில்ல மவுசு 


___ __ __ ___ ___ ____ __ ___ __ ____ _ _____ ___ ___ ____ ____ ______ ______ ____ 


Monday, December 13, 2010

கண்டி மாநகரும் வாகன நெரிசலும்



மலையகத்தின் தலை நகரும் இலங்கையின் இரண்டாவது தலை நகருமான கண்டி இயற்கை வளங்களுடன் கூடிய அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நகராகும் . இது உலக மரபுரிமை நகரும் கூட . கண்டி நகருக்கு வரும் அனைவரையும் வரவேற்பது மகாவலி கங்கையே , நகருக்குள் நுழையும் பிரதான மூன்று பக்கத்திலும் ஓடிகொண்டிருப்பது இந்த மகாவலி கங்கையே ,தலதா மாளிகை ,சிட்டி சென்டர் ,பேராதெனிய பூங்கா , வைத்தியசாலைகள் , இலங்கையில் பிரபலமான பாடசாலைகள் , கல்வி நிறுவனங்கள் ,சர்வதேச விளையாட்டரங்குகள் + etc etc என நிறையவே இங்கு உள்ளது,
இருந்தும் இங்கு நிலவும் வாகன நெரிசல் தினமும் கண்டிக்கு வருவோரை சலிப்படைய செய்கிறது அதுவும் காலை 6.30  மணிமுதல் 8.00 மணி வரை  நிலவும் வாகன நெரிசலில் கப்படுவோரின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது , அதைவிட போக்குவரத்து பொலிசார் படும் அவஸ்தை "என்ன கொடுமை சார் இது.


கண்டி- திகன = இவ்வழியாக பயணிப்போரின் நிலைமையை சொல்லியே தீர வேண்டும் 30 நிமிடங்களில்  செல்ல வேண்டிய இடம் இது அனால் கண்டி தலதா மாளிகாவுடக செல்லும் பாதையை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிவிட்டு ,வாவி சுற்று வட்ட பாதையை மாற்று பாதயாக்கினர் ,இப்பாதையை கடப்பதற்கே  30 -40 நிமிடங்கள் பிடிக்கின்றது ,அதுவும் வாகன நெரிசலில் மாட்டி  கொண்டால் சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேல் பிடிக்கும் .

 இவ்வழியாக தான் பல்லேகலேயில் உள்ள வர்த்தக வலயத்தில் உள்ள தமது காரியாலயங்களுக்கு பல்லாயிரகனக்கனோர் தினமும் சென்று வருகின்றனர் . அது மட்டுமல்ல அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலககிண்ணத்தில் மூன்று போட்டிகள் பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளதையும் குறிப்பிடவேண்டும் .இதனால் இங்கு வரும் வெளியூர் மற்றும் /வெளிநாட்டவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.


அடுத்து கடுகஸ்தொட்டை வாகன நெரிசல் = இது A9 பாதையாகும் இங்கு வாகன நெரிசல் காரணமாக பிரபல பாடசாலைகள் பல 30 நிமிடங்களுக்கு முன்னே ஆரம்பித்து விடுகின்றன ,காரணம் 30நிமிடங்கள்  தாமத மாக ஆரம்பித்தால் வாகன நெரிசலில் சிக்குண்டு பாடசாலையை வந்தடைய குறைந்தது ஒன்பது மணியாவது ஆகும் ,இதனால் மாணவர்கள் முதல் பாடத்தை இழக்க நேரிடும் , யாழ்பாணம் ,திருகோணமலை ,மன்னார் போன்ற பல மணித்தியால பயணங்களுடன் வருவோர் இந்த வாகன நெரிசலில் அகப்பட்டு மேலும் கலைப்படைவர் .இதெல்லாம் எங்கே இதற்கு பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு விளங்க போகிறது , 

பேராதெனிய வீதியின்  நெரிசலும் இதேபோல தான் ,இவற்றை எல்லாம் ஒருநாள் வந்து அனுபவித்தால்  தான் அதிகாரிகளுக்கு  தெரியும் .

இதை தீர்பதற்கு பல வழிகள் இருந்தும் நடைமுறை படுத்தாமல் மக்களை கஷ்டப்படுத்துவது  மிக கொடுமை
உதாரணத்திற்கு மூடியுள்ள பாதைகளை திறந்தாலே ஓரளவு நெரிசலை கட்டுபடுத்தலாம் ,அல்லது மேம்பாலங்களை அமைத்து பிரச்சினையை தீர்க்கலாம் (தற்போது இது எல்லாம் இலங்கை அரசியலில் சகஜம் அப்பா ),அல்லது நகராந்தர  புகையிரத சேவைகளை அதிகரிக்கலாம் ,

 எத்தனை காலம் தான் இவர்களும் நெரிசலில் அகப்பட்டுக்கொண்டு இருக்கபோகிரார்களோ , உலக கிண்ணத்திற்கு முன் நிலைமையை சீர் செய்தால் இங்கு வருவோருக்கு உலக கிண்ண போட்டிகள்  சிறப்பானதொரு விருந்தாக அமையும்
.

Friday, December 10, 2010

பத்து தலை நாகம் (10 Headed Cobra)


இன்று இலங்கையில் காட்டு தீ போல பரவிய ஒரு விடயம் "பத்து தலை நாகம் " பற்றியது , யாழ்பாணம் , தொல்புரம் எனும் இடத்தில காணப்பட்டதாக படத்துடன் செய்திகள் வெளிவந்து இருந்தன . இச்செய்தி வெளியாகி சிலமணிநேரங்களில் "Facebook"  லும் இதை ஒத்த படங்களை பலர் பகிர்ந்து மேலும் இவ்விடயத்தை அனைவரின் காதுகளிலும் கிசு கிசுக்க செய்தனர் .

ஆனால் இச்செய்தி எந்த ஒரு தொலைகாட்சி செய்திகளிலோ இச்செய்தி பற்றி  கூறவில்லை (கவனத்திற்கு =இச்செய்தியை  ஆத்திக வாதிகள் தாங்களுக்கு வாருமானம் இட்டும் வகையில் பயன்படுத்திகொள்ளகூடும்  என்பது இன்னொரு விடயம் ,) ஆனால் சிலர் இதில் காணப்படும் பாம்பு உண்மையானது அல்ல எடிட்(Edit) செய்யப்பட்டது  என்றும் கூறுகின்றனர் அதற்கு சான்றாக பாம்பின் நிழலை குறிப்பிடலாம். நிழலில் தெரிவது ஒரு தலை உள்ள பாம்பின் நிழலை போன்றது , எது எவ்வாறாக இருந்தாலும் பொறுத்து இருந்து உண்மையை அறிந்துகொள்வோம் இது 
 * பத்து தலைகளை கொண்ட அதிசய பாம்பா ,
*அல்லது கம்ப்யூட்டர் பாம்பா ,
*இல்லையென்றால் ஆத்திகர்களின் பாம்பா என்று 



Monday, December 6, 2010

FaceBook

  சமூக வலைப்பின்னல் உலகில் தினம் தினம் புதிய மாற்றங்களை அறிமுகப்படுத்திவரும் பேஸ்புக் தற்போது புரொபைல் பேஜ் வடிவத்தினை மாற்றியமைத்துள்ளதுடன், வசதிகளையும் அறிமுகப்படுத்தியுள்ளது. 










நமது புதிய பேஸ்புக் புரோஃபைல் பேஜ் வடிவமைப்பானது படிப்படியாகவே மாற்றப்பட்டு வருகின்றது. எனினும் நீங்கள் விரும்பினால் இந்த வசதியினை உடனடியாக பெற்றுக் கொள்ளவும் முடியும். 

இதனை உடனடியாக பரிசோதிக்க விரும்பின், 

A ) இம்முகவரியில் சென்று உங்கள் கணக்கினுள் நுழையவும்.http://www.facebook.com/about/profile/

B) பின்னர் வலது பக்க மேல் மூலையில் தரப்பட்டுள்ள ' You have the new profile' என்று குறிப்பிடப்பட்டுள்ள பச்சை நிற பட்டனை அழுத்தவும். 

c) இப்போது உங்கள் புரோஃபைல் மாற்றமடைந்திருக்கும்.

தற்போது புதிய வடிவில் தரப்பட்டுள்ள வசதிகள் மற்றும் மாற்றங்கள் பற்றி பார்வையிடுவோம். 

1) முதலாவதாக உங்களைப் பற்றியதொரு சிறிய அறிமுகம் தரப்படும் நீங்கள் எங்கு கல்வி கற்றீர்கள், பிறந்த திகதி, எங்கு வளர்ந்தீர்கள்? தற்போது என்ன செய்கிறீர்கள் என்பது தொடர்பிலானது இந்த அறிமுகம்.



அதற்குக் கீழ் அண்மையில் டெக் செய்யப்பட்ட புகைப்படங்கள் எனினும் இவ்விடயத்தில் உங்கள் 'பிரைவசி' தொடர்பான எல்லைகள் மீறப்படவில்லை காரணம் நீங்கள் அனுமதியளித்தவர்கள் மட்டுமே இப்புகைப்படங்களைப் பார்வையிட முடியும். 

2) மிக இலகுவாக மற்றைய வோல், இன்போ, போடோஸ் போன்ற பகுதிகளுக்குச் செல்லும் வசதி.



3) தற்போது உங்கள் தொழில் மற்றும் கல்வி என்பன பற்றி அதிகமாக மற்றவர்களுடன் பகிர்ந்து கொள்ளமுடியும். மேலும் உங்களுடன் இருந்த நண்பர்களை உள்ளடக்க முடிவதுடன் - உங்கள் அனுபவங்கள், திட்டங்கள் தொடர்பிலும் குறிப்பிட முடியும்.



4) உங்களுக்கு பிடித்தமான இசை, வீடியோ, விளையாட்டு, விருப்பங்கள் ஆகியவற்றை 'விஷுவல்' வடிவில் காணமுடியும்.



5) இவற்றில் மிக முக்கியமான ஒன்றாகக் கருதப்படுவதுதான் நண்பர்களை அவர்களூடான உங்களின் தொடர்புக்கு ஏற்ப பிரித்துக் கொள்வதாகும். கீழ் காட்டியவாறு அவர்களைப் பிரித்து பட்டியலிட்டுக் கொள்ள முடியும். உறவினர்கள், சிறந்த நண்பர்கள், சக ஊழியர்கள், பாடசாலை நண்பர்கள் போன்றோர் அடிப்படையில் இதனைப் பிரித்துக் கொள்ள முடியும். 

Sunday, December 5, 2010

விஞ்ஞான/தொழில்நுட்ப உலகின் அண்மைய முக்கிய நிகழ்வுகள் _



Note = சுட்ட இடம் =வீரகேசரி இனையம்




1) கூகுள் குரோம் 8 வெளியீடு 

கூகுள் குரோம் இயங்குதளத்தின் புதிய மேம்படுத்தப்பட்ட தொகுப்பாக இது வெளியாகியுள்ளது. வெப்ஸோர் உதவி, பி.டி.எப் விவ்வர் என்பன இதன் விசேட வசதிகளாகும்.


2) தொழில்நுட்ப கல்வி மேம்பாட்டுக்காக கூகுளின் 250,000 அமெரிக்க டொலர் நன்கொடை 

சமூகத்தினிடையே தொழில்நுட்ப அறிவை மேம்படுத்துவதற்கான பயிற்சியை வழங்கும் iGotITtoo என்ற நிறுவனதிற்கு கூகுள் 250,000 $ நன்கொடையாக வழங்கியிருந்தது.

3)கூகுள் ஏர்த் 6 வெளியீடு 

இணையத்தின் ஊடாக உங்களை பல இடங்களுக்கு அழைத்துச் செல்லும் கூகுள் ஏர்த் சேவையின் 6 ஆவது பதிப்பு அண்மையில் வெளியிடப்பட்டது. மிகத்துள்ளியமான முப்பரிமாண படங்கள் மற்றும் மரங்களைக் கூட முப்பரிமாணத்தில் காணக்கூடியதாக இருப்பது இதன் சிறப்பம்சமாகும். 

4) குளோனிங் முறையில் 4 புதிய டோலி ஆடுகள் 

முதல் டோலி ஆட்டின் உயிரணுவில் இருந்தும், அதன் பால்மடி திசுக்களிலும் இருந்தும் மேலும் 4 டோலி ஆடுகளை விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர். 

1996ஆம் ஆண்டு 'குளோனிங்' முறைப்படி 'டோலி' என்ற செம்மறி ஆடு உருவாக்கப்பட்டது. 

14 ஆண்டுகளுக்குப் பிறகு அதிலிருந்து மேலும் 4 டோலி செம்மறி ஆடுகள் தற்போது உருவாக்கப்பட்டுள்ளன. 

இவற்றை இங்கிலாந்தில் நோட்டிங்காம் பல்கலைக்கழக விஞ்ஞானி கீத் கெம்பெல் உருவாக்கியுள்ளார். 


5) பூமிக்கு அப்பால் இன்னொரு சுப்பர்-பூமி 

நமது பூமியிலிருந்து 40 ஒளி வருட தூரத்தில், பூமியை விட 2.6 மடங்கு பெரிதான கோல் ஒன்றினை வானியலாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். 

இது GJ 1214b எனப் பெயரிடப்பட்டுள்ளது. 

6) ஜோர்ஜ் டபிள்யூ மற்றும் ஷூக்கர் பேர்க் சந்திப்பு 

அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி மற்றும் பேஸ்புக் ஸ்தாபகர் ஷூக்கர் பேர்க் ஆகியோர் அண்மையில் பேஸ்புக் தலைமையகத்தில் சந்திப்பொன்றில் ஈடுபட்டனர். இதன் போது பேஸ்புக் பாவனை பற்றிய சுவையான சம்பாஷனை ஒன்றும் இவர்கள் இடையே இடம்பெற்றது.