காரணம் தாம் இடும் பதிவுகள் மக்கள் மத்தியில் சென்றடையாமையே இதற்கு காரணம் என FBI திடிக்கிடும் தகவலை வெளியிட்டுள்ளது (எப்பூடி),இதனால் "ஜூலியன் அசஞ்சே" மிது பல பதிவாளர்கள் கடுப்பில் இருப்பதாகவும் அறியக்கிடைக்கின்றது (ன்குலடட் மீ அல்சோ கடுப்பில் உள்ளேன் )
இதனால் இவரது உயிருக்கு ஆபத்து நேரிடக்கூடும் எனக்கருதி இலங்கை ,இந்தியா போன்ற நாடுகளில் இருந்து கூட்டுபடையாக விசேட பாதுகாப்பு படையணி ஒன்று அனுப்பி வைக்கப்பட்டுள்ளது , இதனால் சென்னை ,கொழும்பு ,கண்டி ,,யாழ்பாணம் ,மதுரை மற்றும் திருநெல்வேழி ஆகிய பிரதேசங்களில் பல பதிவாளர்கள் போராட்டங்களில் இடுபட்டு வருகின்றனர் .இப்போராட்டத்தில் பல கருத்துக்களை வழியுறுத்தி இப்போராட்டத்தை முன்னெடுப்பதாக பதிவர் சங்க ஊடக பேச்சாளர் திரு.பப்ளிசிட்டி பரமசிவம் அவர்கள் குறிப்பிட்டார் .அவரின் கருத்து பின்வருமாறு
இந்த போராட்டத்திற்கு பிரதான காரணம் பதிக்கப்பட்ட பதிவாளர்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்பதே நாங்கள் பதிவாளர்கள் சார்பாக சில நிபந்தனைகளை முன்வைக்கின்றோம் .
* ஜூலியன் அசஞ்சேக்கு பாதுகாப்பிற்காக அனுப்பப்பட்டுள்ள கூட்டு படையினை சம்பந்த பட்ட நாடுகள் திருப்பி அழைக்க வேண்டும்
* ஜூலியன் அசஞ்சே பதிவாளர்களுடன் ஒரு ஒப்பந்தம் செய்துகொள்ளவேண்டும்
அவ்வொப்பந்தத்தில் குறிப்பிடப்படுவது யாதெனில் =
*தினந்தோறும் ஜூலியன் அசஞ்சே செய்திகள் வெளியிடக்கூடாது
மாதத்திற்கு ஒரு முறை அல்லது வாரத்திற்கு ஒருமுறை இவர் அரசியல் அம்பலங்களை வெளியிடலாம் ,
*அதுபோக பத்திரிகைகளில் இவர் சம்பந்தமான செய்திகள் வெளிநாட்டு செய்திகள் பக்கத்தில் மட்டுமே வெளியிட வேண்டும் ,
இக்கோரிக்கைகள் நிறைவேறும் வரை எம் போராட்டம் தொடரும் என வீர முழக்கம் இட்டார் பப்ளிசிட்டி பரமசிவம் அவர்கள் .இதில் பாதிக்க பட்ட பதிவாளர்கல் அனைவருக்கும் அழைப்பும் விட்டுள்ளார் இவர்
(பி.கு =இதில் நானும் நேரடியாக பாதிக்கப்பட்டுள்ளேன்
)
நான் வலைபதிவுலகிற்கு புதுசு
விக்கிலீக்ஸ் நால எனக்கில்ல மவுசு
___ __ __ ___ ___ ____ __ ___ __ ____ _ _____ ___ ___ ____ ____ ______ ______ ____
தப்பா எடுத்துக்காதீங்க... இப்படி முரணா எழுதுறதுல எனக்கு உடன்பாடு இல்ல.
ReplyDeleteவிக்கிலீக்ஸ் நாடுகளின் இப்போதைய நடப்புகளுக்கு தேவைதான்.
ரோஸ்விக் உங்கள் மனம் புண்படும் வகையில் இப்பதிவு இருந்தால் தயவு செய்து என்னை மன்னிக்கவேண்டும் .
ReplyDeleteநான் இதை சுவரஷ்யத்துக்காகவே எழுதினேன் ..
/////////////விக்கிலீக்ஸ் நாடுகளின் இப்போதைய நடப்புகளுக்கு தேவைதான்/////////// உங்களுடைய இக்கூற்றை நான் முற்று முழுதாக ஏற்றுகொள்கிறேன் ,நமக்கு தெரியாத பல அரசியல் அந்தரங்கங்களை அம்பலப்படுத்தி வருகிறது இந்த விக்கிலீக்ஸ் இதனால் பல நாடுகளின் உண்மையான முகம் வெளிச்சத்துக்கு கொண்டுவரப்பட்டுள்ளது .நாம் அனைவரும் ஜூலியன் அசஞ்சேயின் தைரியத்தை பாராட்டவேண்டும் .
மிண்டும் ஒருமுறை மன்னிக்க வேண்டும் உங்கள் மனம் புண் படும் வகையில் பதிவேழுதியதற்கு .