மலையகத்தின் தலை நகரும் இலங்கையின் இரண்டாவது தலை நகருமான கண்டி இயற்கை வளங்களுடன் கூடிய அனைத்து வசதிகளையும் கொண்ட ஒரு நகராகும் . இது உலக மரபுரிமை நகரும் கூட . கண்டி நகருக்கு வரும் அனைவரையும் வரவேற்பது மகாவலி கங்கையே , நகருக்குள் நுழையும் பிரதான மூன்று பக்கத்திலும் ஓடிகொண்டிருப்பது இந்த மகாவலி கங்கையே ,தலதா மாளிகை ,சிட்டி சென்டர் ,பேராதெனிய பூங்கா , வைத்தியசாலைகள் , இலங்கையில் பிரபலமான பாடசாலைகள் , கல்வி நிறுவனங்கள் ,சர்வதேச விளையாட்டரங்குகள் + etc etc என நிறையவே இங்கு உள்ளது,
இருந்தும் இங்கு நிலவும் வாகன நெரிசல் தினமும் கண்டிக்கு வருவோரை சலிப்படைய செய்கிறது அதுவும் காலை 6.30 மணிமுதல் 8.00 மணி வரை நிலவும் வாகன நெரிசலில் அகப்படுவோரின் நிலைமை மிகவும் பரிதாபகரமானது , அதைவிட போக்குவரத்து பொலிசார் படும் அவஸ்தை "என்ன கொடுமை சார் இது.
கண்டி- திகன = இவ்வழியாக பயணிப்போரின் நிலைமையை சொல்லியே தீர வேண்டும் 30 நிமிடங்களில் செல்ல வேண்டிய இடம் இது அனால் கண்டி தலதா மாளிகாவுடக செல்லும் பாதையை பாதுகாப்பு காரணங்களுக்காக மூடிவிட்டு ,வாவி சுற்று வட்ட பாதையை மாற்று பாதயாக்கினர் ,இப்பாதையை கடப்பதற்கே 30 -40 நிமிடங்கள் பிடிக்கின்றது ,அதுவும் வாகன நெரிசலில் மாட்டி கொண்டால் சுமார் இரண்டரை மணித்தியாலங்களுக்கு மேல் பிடிக்கும் .
இவ்வழியாக தான் பல்லேகலேயில் உள்ள வர்த்தக வலயத்தில் உள்ள தமது காரியாலயங்களுக்கு பல்லாயிரகனக்கனோர் தினமும் சென்று வருகின்றனர் . அது மட்டுமல்ல அடுத்த வருடம் நடைபெறவுள்ள உலககிண்ணத்தில் மூன்று போட்டிகள் பல்லேகலை சர்வதேச மைதானத்தில் நடைபெற உள்ளதையும் குறிப்பிடவேண்டும் .இதனால் இங்கு வரும் வெளியூர் மற்றும் /வெளிநாட்டவர்களுக்கு பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தும்.
அடுத்து கடுகஸ்தொட்டை வாகன நெரிசல் = இது A9 பாதையாகும் இங்கு வாகன நெரிசல் காரணமாக பிரபல பாடசாலைகள் பல 30 நிமிடங்களுக்கு முன்னே ஆரம்பித்து விடுகின்றன ,காரணம் 30நிமிடங்கள் தாமத மாக ஆரம்பித்தால் வாகன நெரிசலில் சிக்குண்டு பாடசாலையை வந்தடைய குறைந்தது ஒன்பது மணியாவது ஆகும் ,இதனால் மாணவர்கள் முதல் பாடத்தை இழக்க நேரிடும் , யாழ்பாணம் ,திருகோணமலை ,மன்னார் போன்ற பல மணித்தியால பயணங்களுடன் வருவோர் இந்த வாகன நெரிசலில் அகப்பட்டு மேலும் கலைப்படைவர் .இதெல்லாம் எங்கே இதற்கு பொறுப்புள்ள அதிகாரிகளுக்கு விளங்க போகிறது ,
பேராதெனிய வீதியின் நெரிசலும் இதேபோல தான் ,இவற்றை எல்லாம் ஒருநாள் வந்து அனுபவித்தால் தான் அதிகாரிகளுக்கு தெரியும் .
இதை தீர்பதற்கு பல வழிகள் இருந்தும் நடைமுறை படுத்தாமல் மக்களை கஷ்டப்படுத்துவது மிக கொடுமை
உதாரணத்திற்கு மூடியுள்ள பாதைகளை திறந்தாலே ஓரளவு நெரிசலை கட்டுபடுத்தலாம் ,அல்லது மேம்பாலங்களை அமைத்து பிரச்சினையை தீர்க்கலாம் (தற்போது இது எல்லாம் இலங்கை அரசியலில் சகஜம் அப்பா ),அல்லது நகராந்தர புகையிரத சேவைகளை அதிகரிக்கலாம் ,
எத்தனை காலம் தான் இவர்களும் நெரிசலில் அகப்பட்டுக்கொண்டு இருக்கபோகிரார்களோ , உலக கிண்ணத்திற்கு முன் நிலைமையை சீர் செய்தால் இங்கு வருவோருக்கு உலக கிண்ண போட்டிகள் சிறப்பானதொரு விருந்தாக அமையும்
.
.
உங்கள் வலைப்பூவிற்கு இன்றே முதல் வருகை தருகிறேன்... சிறப்பாக இருக்கிறது... வாழ்த்துக்கள்... இனி பின்தொடர்கிறேன்...
ReplyDeleteமிக்க நன்றி நண்பரே உங்கள் ஊக்குவிப்பிற்கு .. தொடரட்டும் நம் உறவு ...........
ReplyDelete