Friday, December 10, 2010

பத்து தலை நாகம் (10 Headed Cobra)


இன்று இலங்கையில் காட்டு தீ போல பரவிய ஒரு விடயம் "பத்து தலை நாகம் " பற்றியது , யாழ்பாணம் , தொல்புரம் எனும் இடத்தில காணப்பட்டதாக படத்துடன் செய்திகள் வெளிவந்து இருந்தன . இச்செய்தி வெளியாகி சிலமணிநேரங்களில் "Facebook"  லும் இதை ஒத்த படங்களை பலர் பகிர்ந்து மேலும் இவ்விடயத்தை அனைவரின் காதுகளிலும் கிசு கிசுக்க செய்தனர் .

ஆனால் இச்செய்தி எந்த ஒரு தொலைகாட்சி செய்திகளிலோ இச்செய்தி பற்றி  கூறவில்லை (கவனத்திற்கு =இச்செய்தியை  ஆத்திக வாதிகள் தாங்களுக்கு வாருமானம் இட்டும் வகையில் பயன்படுத்திகொள்ளகூடும்  என்பது இன்னொரு விடயம் ,) ஆனால் சிலர் இதில் காணப்படும் பாம்பு உண்மையானது அல்ல எடிட்(Edit) செய்யப்பட்டது  என்றும் கூறுகின்றனர் அதற்கு சான்றாக பாம்பின் நிழலை குறிப்பிடலாம். நிழலில் தெரிவது ஒரு தலை உள்ள பாம்பின் நிழலை போன்றது , எது எவ்வாறாக இருந்தாலும் பொறுத்து இருந்து உண்மையை அறிந்துகொள்வோம் இது 
 * பத்து தலைகளை கொண்ட அதிசய பாம்பா ,
*அல்லது கம்ப்யூட்டர் பாம்பா ,
*இல்லையென்றால் ஆத்திகர்களின் பாம்பா என்று 



No comments:

Post a Comment